ஆக்கிரமிப்பில் இருந்த அகரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக பிரமுகர் வீடு இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை

ஆக்கிரமிப்பில் இருந்த அகரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக பிரமுகர் வீடு இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஜெகன் என்கிற ஜெகதீஸ்வரன், திமுகவை சேர்ந்தவர்.
இவர் அகரம் தென் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு புன்செய் தரிசு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
இதில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும் பல்வேறு அழுத்தத்தின் காரணமாக வீடு அகற்றும் பணிகள் தள்ளிப் போனது.
இந்நிலையில் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகரம் மெயின் ரோடு பகுதியில் உள்ள திமுக ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டின் முகப்பு பகுதி இடித்து அகற்றப்பட்டது.
அதே போல் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களின் வீடுகளை இடித்து வருகின்றனர்.
இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வர உள்ள நிலையில் தற்போது முகப்பு பக்கம் மட்டும் இடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு கால அவகாசம் கேட்டதனால் தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் வேண்டும் என்பது வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
செய்தியாளர்
S S K