தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஏழை மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள். !

காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஏழை மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது .!

வேலூர்மாவட்டம்,காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் தலைமையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் 250 மகளிர்களுக்கு மளிகை பொருட்களும் 2 மாற்றுத்திறனாளர்களுக்கு மூன்று சக்கர வண்டி வழங்கப்பட்டது

மேலும் சாலையோரம் பூ வியாபாரம் செய்யும் மகளிர் ஒருவருக்கு பூக்கடை அமைத்து தரப்பட்டது மேலும் சாலை ஓரம் தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்பவருக்கு தள்ளு வண்டி வழங்கப்பட்டது

நீண்ட நாட்களாக விஜய் இயக்கத்தில் உள்ள பெண்களுக்கு வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டன சுமார் 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இதில் கருணாகரன்,சாரங்கன்.உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

ஆர்.ஜே.சுரேஷ்