வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் குறைதீர்வு கூட்டம் -

வேலூர்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் குறைதீர்வு கூட்டம் -

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் குறைதீர்வு கூட்டம் - உயரதிகாரிகள் தங்களின் குறைகளை போக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தாலும் கீழ்மட்ட அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுவதாகவும் தியாகிகளின் வாரிசுகள் வேதனை

வேலூர்மாவட்டம் ,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள காயிதே மில்லத் அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் குறைதீர்வு கூட்டமானது நடைபெற்றது.இதில் திரளான சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மருத்துவ வசதிகளை சலுகை விலையில் செய்து தர வேண்டும் காப்பீட்டு திட்டத்தை ஏற்படுத்திட வேண்டும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் மனு அளித்தாலும் கீழ் மட்டத்திலும் அதிகாரிகள் அதனை தியாகிகள் வாரிசுகள் தானே என அலட்சியம் செய்கின்றனர் மாநகராட்சியில் தூய்மை பணி சரி வர செய்வது கிடையாது கால்வாய்கள் தூர்வாருவது கிடையாது என குற்றம்சாட்டி பேசினர்.

செய்தியாளர்

ஆர்ஜே.சுரேஷ்குமார்.