இந்திய கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிக வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.!

கிருஷ்ணகிரி

இந்திய கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிக வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.!

இந்திய கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிக வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.

தேமுதிக முதல் முறையாக இந்திய கூட்டணி கட்சியில் இணைந்ததை அடுத்து நடு முழுவதும் தேமுதிக கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக, மற்றும் நகர ஒன்றிய தேமுதிக சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டான அருகில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சின்ராஜ், தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியின் போது பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிக இந்திய கூட்டணி கட்சியில் இணைந்ததை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

அப்போது காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியில் தேமுதிக கட்சியும் இணைந்துள்ளதால் வருகின்ற சட்ட மன்றத்தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக வருவார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெற்றி கோசங்களையும் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள்,

அப்போது கிருஷ்ணகிரி நகர தேமுதிக செயலாளர் ரவி, கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் வேட்டியம்பட்டி முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ