அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் படிக்கும் மாணவிகளுக்கு, தொழில் முனைதலுக்கான திறனுடன் கூடிய சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டது .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் படிக்கும் மாணவிகளுக்கு, தொழில் முனைதலுக்கான திறனுடன் கூடிய சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு, சோப்பு தயாரித்தல் மற்றும் காளான் வளர்ப்பு குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் படிக்கும் மாணவிகளுக்கு, தொழில் முனைதலுக்கான திறனுடன் கூடிய சுய தொழில் பயிற்சியை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன், நுகர்வோர் உரிமை, குழந்தைகள் உரிமை மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையும் இணைந்து ஆர்வம் உள்ள 60 மாணவிகளுக்கு, சுயதொழில் முனைதலுக்கான திறனுடன் கூடிய சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு, சோப்பு தயாரித்தல் மற்றும் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியை நாமக்கல்லைச் சேர்ந்த பிரபாகரன் அளித்தார். பின்னர் இரண்டு நாட்கள் பயிற்சி முடித்த கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட
கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு பெண்களும் சுய தொழில் ஒன்றை கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் சுலபமாக முன்னேறலாம். படிக்கும்போதே உங்களுக்கு சோப்பு தயாரிக்கவும், காளான் வளர்க்கவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி முடிந்து சென்றாலும் மாணவிகள் இப்பயிற்சியை மறக்காமல், தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைக்கு செல்வதை விட வேலை கொடுப்பவர்களாக தங்களை உயரத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அறக்கட்டளையைச் சேர்ந்த செந்தில் ராஜா, மாவட்ட திட்ட மேலாளர் சிவபாரத், பேராசிரியர் பரமகுரு ஆகியோர் பயிற்சி முடித்த 60 கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
