கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை(சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரத்து 600 மதிப்பிலான விபத்து மரணத்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., வழங்கினார்.
உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.அபிநயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ், தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
