கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி. சிதப்பரம்பிள்ளையின் 154-வது நினைவு தினம் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை நினைவு நாளினை முன்னிட்டு அவரின் திரு உருவச்சிலைக்கு சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், வெள்ளையர்களுக்கு இணையாக முதல்முதலில் கப்பல் ஓட்டிய வ.உ.சி. சிதப்பரம்பிள்ளையின் நினைவு நாளினை முன்னிட்டு அவரின் நினைவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி. சிதப்பரம்பிள்ளையின் 154-வது நினைவு தினம் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரப்பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய டாக்டர் சந்திரமோகன்.....
வ. உ. சிதம்பரம்பிள்ளை ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், வழக்கறிஞராகவும் இருந்ததோடு வெள்ளைக்காரனின் பிரித்தானியக் கப்பல்களுக்கு போட்டியாக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பின்னர் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டதை வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் வ. உ. சிதம்பரம்பிள்ளை மீது தேசத்துரோக குற்றச்சாட்டியதுடன் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து அவர் கோவை மற்றும் கண்ணனூர் சிறைகளில் தண்டனையை அனுபவித்ததோடு வழக்கறிஞர் உரிமத்தையும் வ. உ. சி இழந்ததார். பின்னர் 1936 அன்று அவர் காலமானார். இன்றுடன் 154 வருடங்கள் ஆகிவிட்டது. வ. உ. சிதம்பரம்பிள்ளை வாழ்கை வரலாறு குறித்து அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்சியின் போது நுகர்வோர் அமைப்பின் மாநில செயலாளர் ரோஷன் ரஷீத், தேனி மாவட்ட தலைவர் பிரசாந்த்
மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி,
முரளிதரன் மற்றும் ஆசிரியர்கள் சரவணன், டாக்டர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
