ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி நீலம் பண்பாட்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், ஆணவக்கொலை செய்யப்பட்ட கவீனுக்கு நீதிக்கேட்டும், ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி நீலம் பண்பாட்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்.
நெல்லையில் ஐடி ஊழியர் கவீன் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால் காதலியின் சகோதரனால் ஐடி ஊழியர் வெட்டிப் படுக்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் ஆணவக்கொலையான கவீனுக்கு நீதிக்கேட்டும் தலித் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில் ஒசூர் மாநகராட்சி, ரயில்வே நிலையம் முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நீலம் பன்பாட்டு மையம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆணவக்கொலையான கவீனுக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழக அரசு ஆணவக்கொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நீலம் பண்பாட்டு மையத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் உதய், பரசுராமன், பிரகாஷ், அம்ரிஸ், நவீன் உள்ளிட்ட 200 க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ