அதிமுக சார்பில் ஊராட்சி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் மிட்டஹள்ளி & எர்ரஹள்ளி ஊராட்சி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி கலந்து கொண்டு சிறப்புகள் ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட கழக செயலாளர் KPM.சதீஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சியின் முன்னதாக காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான பையூர்.P.ரவி வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
