சாமல்பட்டி அடுத்து தாசம்பட்டியில் இரண்டாவது நடைமேடை அமைக்க ஒப்புதல்.!

கிருஷ்ணகிரி

சாமல்பட்டி அடுத்து தாசம்பட்டியில் இரண்டாவது நடைமேடை அமைக்க ஒப்புதல்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் சேலம் மண்டல மேலாளர் தலைமையில் நடைபெற்ற திட்ட பணிகளின் ஆய்வில் நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் எம்பி ஆலோசனையின் பேரில் சேலம் மண்டல ரயில்வே உறுப்பினர் ரகமத்துல்லா மற்றும் வட்டார தலைவர் தனஞ்செயன், ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் சசிகுமார் மாவட்ட செயலாளர் வினோத்குமார்,சந்திரபாலு, ஜெகதீசன், சுப்பிரமணி, பிரசாந்த், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் எம்பி அவர்களின் முயற்சி சாமல்பட்டி அடுத்து தாசம்பட்டியில் இரண்டாவது நடைமேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கு சென்னை முதல் கோயமுத்தூர் வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அப்பகுதியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் எம்பி அவர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ