உலக  நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

உலக  நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஐ.இ.எல்.சி., பார்வையற்றோர் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக  நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் தினேஷ் குமார்.,IAS, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்.,MLA, ஆகியோர் தலைமையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் 73 மாற்றுத்திறனாளிகளுக்கு, 30.70 லட்சம் ரூபாய் மதிப்பில், 21 மின்கலன் பொருத்திய சக்கர நாற்காலி வண்டி, காதொலி கருவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், பிரெய்லி வாட்ச் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் 

மாருதி மனோ