ஸ்ரீ கண்ட ஶ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஶ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபோகம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள வசந்தபள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கண்ட ஶ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைப்பெற்ற சீதா ராமர் திருக்கல்யாண வைபோக விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தபள்ளி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கண்ட ஶ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி மற்றும் ராம நவமி ஆகிய தினங்களில் வெகு விமர்ச்சியாக விழா நடைபெறுகிறது.

இந்த திருக்கோவில் மிகவும் சத்தி வாய்ந்தாக கருதப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி மூன்று மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொள்வது வழக்கம்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஸ்ரீ அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ கண்ட ஶ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஶ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதன் முன்னதாக திருக்கோவிலின் தலைமை குரு விஜய ராகவன் சுவாமிகளின் தலைமையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜையாக துளசி, வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்தப்பட்டு கற்பூரத் தீபாராதணைகள் காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாணத்தில் கணபதி ஹோமத்துடன் நடைபெற்ற இந்த பூஜையின் போது சிதா, ராமர் திருக்கல்யாண தோற்றத்தில் காட்சியளித்த சீதா ராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மேளத்தாளம் முழங்கிட சீதா ராமர் திருக்கல்யாண வைபோகம் கரஹோசத்துடன் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. பின்னர் சீதா ராமருக்கு 108 தேங்காய் உடைக்கப்பட்டு கற்பூரத்தீபாதாரணைகளும் காண்பிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சீதா, ராமரை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும் திருக்கல்யாணத்தினை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பெரும் அன்னதானமும் நடைபெற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ
