2025 - 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா.!

கிருஷ்ணகிரி

2025 - 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா.!

2025 - 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று, 2025 - 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

பள்ளித் தலைமை ஆசிரியர்  செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,  பள்ளி உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா.யோகலட்சுமி, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தமது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட உதவி ஆசிரியர்கள் அனைவரும் இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு நிறைவு செய்து செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் நல்ல அறிவுரைகளையும் கூறினர். 
நிகழ்வில் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கும்,  இப்பள்ளியில் 3 ஆண்டுகள் தற்காலிக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது விடுவித்துச் செல்லும் திருமதி மா. யோகலட்சுமி அவர்களை பாராட்டியும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பில் இனிப்பு,  அசைவ உணவு மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவை  வழங்கப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ