சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் தவெக வினர் ரகளை செய்ததால் பரபரப்பு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்து அங்கீகாரிக்கப்பட்ட அரசியல் கட்சினர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் நாங்களும் அரசியல் கட்சினர்கள் தான் என்று கூறி த.வெ.க கட்சியினர் தேர்தல் அலுவலரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான பணிகள் முன்னேற்ற பணிகள் குறித்தும் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் தொடர்பாகவும் இறப்பு இருமுறை பதிவு நிரந்தரமாக வெளியூர் சென்றவர்கள் மற்றும் முகவரியில் இல்லாதவர்கள் ஆகியோர்களின் விவரங்கள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் வாக்காளர் பதிவு அலுவலர் திருமதி கீதா ராணி தலைமையில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இக் கூட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி என அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சூளகிரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் கூட்டத்தில் அத்துமீறி புகுந்து எங்களை ஏன் இந்த கூட்டத்தில் எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கூறி
வாக்காளர் பதிவு அலுவலர் திருமதி கீதா ராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர்
சந்திரமோகன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியும் அங்கீகாரம் இல்லதவர்கள் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்ததால், த.வெ.க. தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒரு திரைப்படத்தில் நானும் ரவுடிதான் என கூறுவது போல நாங்களும் அரசியல் கட்சியினர் என்று கூறி அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் சமுக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தியாளர்
மாருதி மனோ
