அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாம். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஊராட்சி ஒன்றியம், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பார்வையிட்டார்.
கால்களை இழந்த 11 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கால்கள் வழங்கும் பொருட்டு அளவீடு பணிகள் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 1368-நபர்கள் பதிவு செய்து தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ