ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் தை மாத பௌர்ணமி சிறப்பு வழிபாடு.!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் தை மாத பௌர்ணமி சிறப்பு வழிபாடு.!

ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் தை மாத பௌர்ணமி சிறப்பு வழிபாடு. ராகு கேது பிரீத்தி மிளகாய் வத்தல் யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு பௌர்ணமியும் இந்த திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு கேது ப்ரீத்திக்காக மிளகாய் வத்தல் யாகம் செய்து  வழிபடுபவர்கள். மேலும் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் பூசம் திருநாளானது ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

அந்த வகையில் திருக்கோவிலில் அகண்ட யாகத்தில் வேள்வித்தீயை வளர்த்து அதில் மிளகாய் வத்தலை சமர்ப்பித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஒவ்வொருவரும் மிளகாய் வத்தலை எடுத்து தங்கள் தலையை இடமும் பூரணமாக சுற்றி திருஷ்டியை கழிக்கும் வண்ணமாக யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை சமர்ப்பித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

பின்னர்  மூலவர் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதில் அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ