காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட தனது விருப்ப மனுவினை ஒன்றிய வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.முனியப்பா வழங்கினர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட தனது விருப்ப மனுவினை ஒன்றிய வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.முனியப்பா வழங்கினர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 - ம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் தங்களது விருப்ப மனுவினை தாக்கல் செய்யலாம் என்று மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியினர் வருகின்ற சட்ட பனறத்தேர்தலில் போட்டியிட வேண்டி தங்களது விருப்ப மனுவினைக் கொடுத்து வருகின்றனர்
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றிய வட்டார காங்கிரஸ் தலைவராக இருக்கும் எஸ்.வி. முனியப்பா
வேப்பனஹள்ளி சட்ட மன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவினை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்
அப்போது காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
