அதிமுக உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் அதிமுக உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அரசினைக் கண்டித்து அதிமுக கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசினைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் 125 நாட்கள் வேலை திட்டத்தினை நசுக்கும் விதமாக செயல்படும் தமிழக அரசினை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் இதே போல பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், ஊத்தங்கரை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், தங்கமுத்து, மாவட்ட மகளீர் அணி செயலாளர் திருமதி கல்பனா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி பரிதாநவாப், எம்.ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் சின்னதம்பி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர்களான சோக்கடி ராஜன், கண்ணியப்பன், சூர்யா, அஜி, கார்த்திக் பால்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
