திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .!
கிருஷ்ணகிரி
பர்கூரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் விதமாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பாரதிய ஜனதா மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையம் அருகில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நாகராஜ் மற்றும் பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இத்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுகவனம், மூத்த வழக்கறிஞர் அசோகன், பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் அஞ்ஞர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மற்றும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
