ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
த வெ க
சென்னை: 29 வயதைக் கடந்தும் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் பாமர மக்களுக்கும், ஏமாற்று பேர் வழிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நல்லவங்களுக்கும் நாட்டை நாசப்படுத்துவர்களுக்கும் இடையே நடக்கும் போட்டி.. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தவெக திமுக இடையே தான் போட்டி.. விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையேயான ஆரோக்கியமான ஜனநாயக போட்டி
அத்தனை வலிகளையும் தாண்டி வந்திருக்கிறேன். உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன்.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். நான் வேற, வேட்பாளர்கள் வேற அல்ல.. நான் எப்படியோ.. அதே மாதிரி நான் நிறுத்துகிற வேட்பாளர்களும்.. இதயத்தில் உங்கள் விஜய் இல்லம் தோறும் உங்கள் வேட்பாளர்.. உங்கள் குரலுக்கு ஓடி வரும்.. நீங்கள் நினைத்ததும் ஓடி வரும் வேட்பாளர்களாகத் தான் இருப்பார்கள்.. என்னை மாதிரி உங்களை நம்பியே, வேட்பாளர்களும் உங்களை நம்பியே களத்தில் இறங்குகிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்க, என்று விஜய் பேசினார். இதையடுத்து அவர் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
பிணையில்லா கல்விக்கடன்: நிதி நெருக்கடியால் கல்வி தடைபடுவதைத் தவிர்க்க, 12-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் (Ph.D) வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு உதவித்தொகை: 29 வயதைக் கடந்தும் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அரசுப் பணி நியமனம்: அரசுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை முறைப்படுத்தப்பட்டு, நிலையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தொழில் மற்றும் சமூக நலன்
தனியார் நிறுவனங்களுக்குச் சலுகை: 75 சதவீத தமிழர்களுக்கு வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி (SGST) வரியில் 2.5 சதவீத மானியமும், மின் கட்டணத்தில் 5 சதவீத மானியமும் வழங்கப்படும். மேலும், இத்தகைய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அரசு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
போதை இல்லா தமிழகம்: தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற சிறப்புச் செயல்பாட்டு முறைகள் மற்றும் அணுகுமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மாநிலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தவெக தெரிவித்துள்ளது.
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி
தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபி - செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
எழும்பூர் - ராஜ் மோகன்
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் - வி.எஸ்.பாபு
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
