தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 26வது கொடி நாள் கிருஷ்ணகிரியில் உள்ள தேமுதிகவினர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.!

கிருஷ்ணகிரி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 26வது கொடி நாள் கிருஷ்ணகிரியில் உள்ள தேமுதிகவினர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 26வது கொடி நாள் கிருஷ்ணகிரியில் உள்ள தேமுதிகவினர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 26வது கொடி நாளினை தமிழக முழுவதும் உள்ள தேமுதிகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டு இந்த நாளில் கழகக் கொடியினை அறிமுகம் செய்து வைத்ததால், தேசிய திராவிட கழக சார்பில் இந்தநாளை கொடி நாளாக கொண்டாடி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி சென்னை சாலையில் நகர செயலாளர் ரவி தலைமையில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், மாவட்ட பிரதிநிதி லேத்முருகன், ஆகியோர் முன்னிலையில், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பயனபள்ளி எம்.முருகேசன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். முன்னதாக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

பின்னர் கழக கொடியினை ஏற்றி வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். கொடியேற்றும் நிகழ்ச்சியின் நிறைவாக வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அயராது உழைத்து வெற்றிக்காக பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சந்திரன், கழக நிர்வாகிகளான பார்க்சிவா, நகர துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜவேலு உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ