இன்று 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக. ! கிருஷ்ணகிரியில் துவக்க விழா. !
கிருஷ்ணகிரி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு இன்று 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே பி முனுசாமி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆரம்ப நாளில் ஓசூர் நகரில் பொதுமக்களிடையே கூட்டத்தில் பரப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர பொறுப்பாளர்கள், பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ