தொழிலை பிரிப்பதற்கு பதிலாக தொழிலாளர்களைப் பிரித்தார்கள். அதனை மதம் அங்கீகரிக்கிறது என்று சொன்னார்கள்,அதனை எதிர்த்து போராடியவர் பெரியார் என ஆ.ராசா. !

அரசியல்

தொழிலை பிரிப்பதற்கு பதிலாக தொழிலாளர்களைப் பிரித்தார்கள். அதனை மதம் அங்கீகரிக்கிறது என்று சொன்னார்கள்,அதனை எதிர்த்து போராடியவர் பெரியார் என ஆ.ராசா. !

தனியார் யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நான் முழுக்க முழுக்க அரசுப்பள்ளி, அரசு கல்லூரி, அரசு சட்டக்கல்லூரியில் தான் எனது படிப்பை முடித்தேன். நான் நான் பேசிய ஆங்கிலத்தை நாடாளுமன்றத்தில் வியந்து பார்த்தவர்கள் இருக்கிறார்களே தவிற வித்தியாசப்படுத்தி இவனுக்கு ஒன்றும் தெரியாது என சொன்னவர்கள் யாரும் கிடையாது.

கோவணம் கட்டியவரின் பேரனான நான் தற்போது ஒன்றிய அமைச்சராக இருந்தேன். மேலும் எனது ஒரே மகள் லண்டனில் மிகவும் உயர்ந்த பல்கலைக்கழத்தில் சட்ட மேல்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். என் மகளுக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது. என் மகளிடம் சென்று நீ தாழ்ந்த சாதி என சொன்னால், ஓங்கி அறைந்து போய் வேலைய பாருடா என சொல்லிவிடுவால்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எல்லோருக்குமான கல்வியாக இருந்ததை நீ படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு தத்துவம் வந்தது. அதை தான் ஆர்எஸ்எஸ் பிரதிபலிக்கிறது. அந்த தத்துவத்தில் இருந்து நம்மை மீட்பதற்காக தான் இங்கே ஒரு அரசியல் தேவைப்பட்டது. அது தான் பெரியார் முன்னெடுத்த திராவிட சித்தாந்தம். பிறப்பின் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்வது ஒரு தத்துவம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நமது தத்துவம்.

தொழிலை பிரிப்பதற்கு பதிலாக தொழிலாளர்களைப் பிரித்தார்கள். அதனை மதம் அங்கீகரிக்கிறது என்று சொன்னார்கள், கடவுள் இப்படி தான் உன்னைப் படைத்திருக்கிறார் என்று சொன்னார்கள். அதனை மறுத்துவர் தான் தந்தை பெரியார், அம்பேத்கர்.

உங்களை அறிவியல் படுத்தி அரசியல் படுத்தியது தான் பெரியாரின் தத்துவம். அந்த தத்துவத்தின் பின் வந்தது தான் திராவிட சித்தாந்தம்.

நல்ல தலைவர்கள் மிகவும் முக்கியம். எவ்வளவு பெரிய தத்துவமாக இருந்தாலும் சரி, தலைவன் நல்லவனாக இருக்க வேண்டும். எந்தவொரு தத்துவமாக இருந்தாலும், அதனை எல்லா காலத்திலும் அப்படியே கொண்டுபோக முடியாது. அந்த இயக்கத்தில் பிரச்சினைகள் வரும், சேதாரங்கள் வரும். நல்ல தலைவன் இல்லையென்றால் தத்துவம் நீர்த்துப்போகும்.

ஆனால் தற்போது தத்துவம் என்றால் என்னவென்று தெரிவதில்லை. தறுதலைத் தலைவர்கள் முன்னெடுக்கும் தவறான தத்துவத்தால் தற்போதைய இளம் தமிழ் சமூகம் எங்கே போய் நிற்கும்? என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார் நீலகிரி பாராளூமன்ற உறுப்பினரும் , திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )