வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி எண்கள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு. !
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 53 கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி எண்கள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சேகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
