வைத்திலிங்க புரத்தில் மாநில அளவிலான ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி.!

தென்காசி

வைத்திலிங்க புரத்தில் மாநில அளவிலான ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி.!

வைத்திலிங்க புரத்தில் மாநில அளவிலான ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி

தென்காசி, நவ - 05

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே வைத்திலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீஇராமசுவாமி  காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு வி.பி.எம்.கிங்ஸ் காமராஜர் கபாடிக் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து முதலாம் ஆண்டு ஒரு நாள் மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி  நடை பெற்றது. அதில் 70 அணியினர் கலந்து கொண்டு ஐந்து சுற்றாக விளையாடினர்.

வைத்திலிங்கபுரம் எஸ்.இராமசாமிநாடார், கே.புங்கா வனத்தான், வி.திருமலைக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மின்னொளி கபாடி போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பாவூர்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் பட்டுராஜன் கலந்து கொண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தார்.

முதல் பரிசு ரூ21,000 வழங்கியவர் முன்னாள் ஆவுடையார் ஊர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.குத்தாலிங்கராஜன், முதல் பரிசு வெற்றிக்கோப்பை தென்காசி மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் திறன் மேம்பாட்டு தலைவர் ஆர்.ஆர்.முரளிதரன் வழங்கினர்.

2வது பரிசு ரூ15,000 வழங்கியவர். தங்கத்துரை,வளர்மதி ராஜன் திமுக மாவட்ட பிரதிநிதி 2வது பரிசு வெற்றிக்கோப்பை வழங்கியவர் ஆவுடையானூர் பாஜ, 3-வது பரிசு ரூ10,000 வழங்கியவர் எஸ்.ஜானகிராமன், எஸ்.ஆர். காய்கனி வியாபாரம், காமராஜர் தினசரி மார்க்கெட் பாவூர்சத்திரம் -3-வது பரிசு வெற்றிக்கோப்பை வழங்கியவர் எஸ்.முருகன் மேல லெட்சுமிபட்டி அரியப்பபுரம்.

முதல் பரிசு ரூ21,000 கே.எம்.சி.ஜூனியர் குறும்பலாப்பேரி அணியும், 2-வது பரிசு ரூ15,000 வி.பி.கிங்ஸ் காமராஜர் கபாடி கிளப் வைத்திலிங்க புரம் அணியும், 3-வது பரிசு ரூ10,000 கே.எஸ்.ஆர். பிரதர்ஸ் கரிசலூர் அணியும் வெற்றி பெற்றது.

கபாடி போட்டியை வி‌.பி.கிங்ஸ் காமராஜர் கபாடிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கபாடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்