பாவூர்சத்திரத்தில் டிச 18 ல் 133 மோட்டார் வாகனங்கள் ஏலம்.!

தென்காசி

பாவூர்சத்திரத்தில் டிச 18 ல் 133 மோட்டார் வாகனங்கள் ஏலம்.!

பாவூர்சத்திரத்தில் டிச 18 ல் 133 மோட்டார் வாகனங்கள் ஏலம்

தென்காசி எஸ்பி தகவல் 

தென்காசி, டிச - 12

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய வளாகத்தில் வரும் 18ஆம் தேதி ஆலங்குளம்
உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் நடை பெற உள்ளது. 

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025 ஆம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை. 15.12.2025 ஆம் தேதி முதல் 17.12.2025 ஆம் தேதி வரையிலான
 3 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரில் பார்வையிடலாம்,.

 மேலும் ஏலம் எடுக்க விரும்பும் நபர் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் 3000/- முன் பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

மேலும் விபரங்களுக்கு 94884-88933, 78688-61828 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்