தென்காசியில் காவலர், சிறைக் காவலர் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு.!
தென்காசி
தென்காசியில் காவலர், சிறைக் காவலர் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு.
தென்காசி எஸ் .பி. செ.அரவிந்த் தகவல்
தென்காசி, நவ - 05
தென்காசி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு வரும் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மணி 10:00 மணி முதல் 12. 40 மணி வரை நடைபெற உள்ளது.
இது பற்றி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பு ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக் கான நேர்முகத் தேர்வு தென்காசி மாவட்டத்தில் வரும் 09.11.2025 அன்று 8 மையங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000 ஆண்களும் (4500001- 4501000), பண்பொழி மீனாட்சிபுரத்தில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 800 ஆண்களும் (4501001- 4501800), தென்காசி கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 767 ஆண்களும் ( 4501801- 4502567), பாவூர்சத்திரம் சிவகாமிபுரம் பகுதியில் உள்ள எம்.எஸ்.பி.வி வேலாயுத நாடார் - லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1000 ஆண்களும் (4502568 - 4503567), புளியங்குடி எஸ்விசி நகர் பகுதியில் உள்ள
எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1300 ஆண்களும் (4503568 - 4504867), வாசுதேவநல்லூர் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள எஸ் தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000 ஆண்களும் ( 4504868 - 4505867), தென்காசி ரயில் நிலையம் அருகே உள்ள மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 244 பெண்களும் ( 8500001 - 8500244), ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் உள்ள ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1800 பெண்களும் ( 8500245 - 8502044) மேற்படி 8 தேர்வு மையங்களில் 7911 பேர்கள் எழுத்து தேர்வு எழுத உள்ளனர்.
மேற்படி எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை, பரீட்சை அட்டை, மற்றும் கருமை நிற பந்து முனை பேனா, உள்ளிட்டவை மட்டுமே தேர்வு எழுதும் அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தினை எடுத்து வரவில்லை என்றால் கண்டிப்பாக எழுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்களின் அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தால் விண்ணப்பதாரர் தற்போது எடுத்த தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை வெள்ளை தாளில் ஒட்டி அரசிதழ் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு மையத்திற்கு அதனை கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் மையத்திற்குள் காலை 8 மணி முதல் 9 30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். மேலும் காலை 09.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு அறைக்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத், உள்ளிட்ட எந்தவிதமான எலக்ட்ரானிக் பொருட்களும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
தென்காசி
