தென்காசி எஸ்.பி யிடம் பாஜக வினர் திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது புகார் மனு.!

தென்காசி

தென்காசி எஸ்.பி யிடம் பாஜக வினர் திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது புகார் மனு.!

தென்காசி எஸ்.பி யிடம் பாஜக வினர் திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது புகார் மனு

தென்காசி நவ 19

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது

நான் தென்காசி மாவட்டபாஜக மாவட்ட தலைவராக பணி செய்து வருகிறேன் 
18-11-2025 அன்று மாலை 4 மணி அளவில் சமூக வலைத்தளத்தை பார்வையிட்ட போது கடந்த 11-11-25ம் தேதி அன்று தென்காசியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சீர்திருத்த இசை யாருக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்மனுதார் ஜெயபாலன் பொது மேடையில் வைத்து பாரத  பிரதமர் நரேந்திர மோடியை ஒருமயில் பேசியும் இந்திய நாட்டின் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் வகையில் உங்கள் வாக்குகளை பறிப்பதற்கு துடிக்கிறான் மோடி என்றும் அவன் ஒரு இன்னொரு நரகாசுரன் என்றும் அவனைத் தீர்த்துக் கட்டினால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் எனவே ஒன்று சேர்வோம் வென்று காட்டுவோம் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார்.

மேற்படி எதிர் மனுதாரர் ஜெயபாலன் கொலை வெறி பேச்சு தேசத்தை நேசிக்கும் பல கோடி மக்களுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது இதனால் சொல்லனும்னா மன துயரத்திற்கு ஆளானேன் மேற்படி எதிரியின் மேடைப் பேச்சு அங்கு கூடியிருந்த மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற மனப்பான்மையும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் பாரத நாட்டின் தேர்தல் சீர்திருத்தம் குறித்து பொதுமக்கள் இடையே தவறான எண்ணத்தை தோற்றுவித்து இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் தேச துரோகத்தை வளர்த்து இந்திய நாட்டின் அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்மனுதாரர் ஜெயபாலன் மீது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கொலை மிரட்டல் விடுத்து மற்றும் தேச துரோக கருத்துக்களை கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் புது மேடையில் பேசிய ஜெயபாலன் மீது பல்வேறு பிரிவுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் தென்காசி நகர தலைவர் சங்கர சுப்பிரமணியன், தென்காசி நகர பார்வையாளர் செந்தூர்பாண்டியன்,
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சங்கரன்கோவில் வழக்கறிஞர்
வீரபத்திரன், மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார், மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சண்முகவேலு, தென்காசி நகர பொதுச்
செயலாளர்கள் லட்சுமண பெருமாள், பாலசுப்பிரமணியன், பொருளாளர் விஸ்வநாதன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் விவேக்குமார், சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முத்துச்செல்வன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், 
இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சித், தென்காசி நகர வர்த்தக பிரிவு தலைவர் முருகன்
உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்