வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, பாகம் 38 ல், வாக்காளர்கள் மோகன், அமுதா, அருண் ஆகியோர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கினார்.
உடன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
