தென்காசியில் தமுமுக சார்பில் கருப்பு துண்டு அணிந்து ஆர்ப்பாட்டம் .!

தென்காசி

தென்காசியில் தமுமுக சார்பில் கருப்பு துண்டு அணிந்து ஆர்ப்பாட்டம் .!

தென்காசியில் தமுமுக சார்பில் கருப்பு துண்டு அணிந்து ஆர்ப்பாட்டம் 

தென்காசி டிசம்பர் 6 

தென்காசியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று வழிபாட்டு தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்களை பாதுகாக்கவும் ஜனநாயக விரோத வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிடக் கோரியும் தோளில் கருப்பு துண்டு அணிந்தும் கையில் கருப்பு கொடி ஏந்தியும் மக்கள் திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர் நயினார் முகம்மது தலைமை வகித்தார். மமக மாவட்டச் செயலாளர் சலீம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் முகமது பாசித் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பஷீர் ஒலி, பீர் மைதீன், மசூது, அப்துல் மஜீத், காதர் மைதீன், சித்திக், முகிபுல்லாசா, செய்யது அலி பாதுஷா, ரஜாய் ஆரிப், திவான் ஒலி! மரைக்காயர் பீர், முத்தலிப், மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் துவக்க உரை ஆற்றினார்.

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவரதன் வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் முகைதீன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகர், தி க மாவட்ட செயலாளர் வீரன், ஐயுஎம்எல் மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி, திமுக நகர செயலாளர் சாதிர், விசிக மாவட்ட செயலாளர் செல்வம், சிபிஎம் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, தலைமை கழக பேச்சாளர் கொலம்பஸ் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், காங்கிரஸ் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இதில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என கண்டன கோஷமிட்டனர்.

முடிவில் நகர தலைவர் அபாபில் மைதீன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்