ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சேர்மன் ஆறுமுகம் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சேர்மன் ஆறுமுகம் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில்
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரையில் இந்திய அரசியல் அமைப்பினை உருவாக்கியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்த உத்தமர் டாக்டர் அம்பேத்கரின் 69 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளரும் முன்னாள் சேர்மேனுமாகிய ஆறுமுகம் தலைமையில் டாக்டர் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
அப்போது ஊத்தங்கரை ரவுன்டான அருகில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கரின் திருஉருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நினைவு அஞ்சலியின் போது நகர தலைவர் விஜயகுமார், வட்டார தலைவர் திருமால், முன்னாள் நகர தலைவர் முத்து, பூக்கடை மகி, ஒப்பந்ததாரர் சின்னதம்பி, உள்ளிட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
