வறட்சியான பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்க ஏதுவாக ரூ.274 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நீர்வளத்துறை அரசு தலைமைச் செயலாளர் ஜே.ஜெயகாந்தன் நேரில் ஆய்வு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம் எண்ணேகொள் அணைக்கட்டின் இடது மற்றும் வலது புறத்திலிருந்து புதிய வழங்கு கால்வாய்கள் வெட்டி தென்பெண்ணையாற்றின் உபரி நீரை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்க ஏதுவாக ரூ.274 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நீர்வளத்துறை அரசு தலைமைச் செயலாளர் ஜே.ஜெயகாந்தன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
