அதிமுக வில் இணைந்த திமுக நகர செயலாளர் நவாப்பை டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினார்.!
கிருஷ்ணகிரி
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த முன்னாள் கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் நவாப்பை டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த முன்னாள் கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் நவாப் மற்றும் அவரது துணைவியாரும், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவருமான பரிதா நாவாப் ஆகியோரை தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும், சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாருமான டாக்டர் சந்திமோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தகம் மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியதோடு தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.


அப்போது சரியான நேரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைந்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடந்து கழக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அசோக் குமார், கிருஷ்ணகிரி நகர அதிமுக செயலாளர் கேசவன் உள்ளிட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்களை சந்தித்து உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
