தென்காசியில் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

தென்காசி

தென்காசியில் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

தென்காசியில் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி செப் 30


தென்காசியில் தென்காசி தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பாக குற்றாலம் ஐந்தருவி பழப்பண்ணை தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சி ஐ டி யு மாவட்ட தலைவர் வன்னிய பெருமாள் துவக்க உரையாற்றினார். .

தானுமூர்த்தி, அய்யப்பன், லெனின்குமார்,
மகா விஷ்ணு, பத்மா, குருசாமி, தர்மராஜ், முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  

இதில் நாகலிங்கம். முருகன், ராதாகிருஷ்ணன், முருகையா, குட்டிராஜ்,திருமலை, குமார், சீனிவாசன், மாரியப்பன் ஆகியோர் 25 ஆண்டு காலம் போராடுகின்ற தோட்ட கலைத்துறை வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 1998 ல் தொழிலாளர்களை நிரந்தர படுத்த கோரி நீதிமன்றத்தில் வழக்கு. 2002 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யபட்டது 2018 தொழிலாளர் வேலை வழங்க உத்தரவு வழங்கபட்டது.

2021ல் மேல்முறையீடு செய்யப் பட்டது .2025 ல் அனைத்து தொழிலாளர் களுக்கும் வேலை வழங்க நீதி மன்றம் உத்திரவு  வழங்கியது என விளக்கி பேசினார்கள். முடிவில் மணிகண்டன் நிறைவு உரை ஆற்றினார்.

செய்தியாளர்

AGM கணேசன்