ராணுவ வீரர்களின் CSD கேன்டீனை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சார்பில் ஆர்ப்பாட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர்களின் CSD கேன்டீனை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் தற்போது சி.எஸ்.டி கேன்டீன் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே இயங்கி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் முப்படை வீரர்களுக்கான கேண்டினை கிருஷ்ணகிரியில் உள்ள இ.சி.ஹெச்.எஸ் அருகில் புதியதாக கேண்டின் கட்டிடம் கட்ட கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது கிருஷ்ணகிரி மையப்பகுதியில் இயங்கி வரும் CSD கேண்டினை கிருஷ்ணகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரப்பம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வாடகைக்கு எடுத்து இடமாற்றம் செய்ய உள்ளனர்.
ஆகவே புதிய கட்டிடத்திற்கான பணி முடியும் வரை தற்போது கிருஷ்ணகிரி நகரிலேயே இயங்கி வரும் CSD கேண்டினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சங்கம் நிர்வாகிகள் சார்பில், முன்னாள் ராணுவத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிருஷ்ணகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரப்பம் கிராமத்திற்கு இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று வர இயலாத காரணத்தாலும், ஒருவழிப்பாதை, ஏரி, குட்டை, சுடுகாடு, உள்ளிட்ட பாதுகாப்பற்ற இடமாக இருப்பதாலும், பஸ் நிறுத்தம் ஆட்டோ மற்றும் எந்த ஒரு போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலையில், வயதானவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முடியாத காரணத்தினாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையிலும், நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இயங்கி வரும் இடத்திலேயே தொடரந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
