அரசால் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களை அபகரித்த பா.ஜ.க.நிர்வாகி, மாவட்ட.ஆட்சியரிடம் புகார் கொடுத்த விவசாயிகள். !

கிருஷ்ணகிரி

அரசால் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களை அபகரித்த பா.ஜ.க.நிர்வாகி, மாவட்ட.ஆட்சியரிடம் புகார் கொடுத்த விவசாயிகள். !

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  வழங்கிய நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து, தென்னை மரத்தினை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிய பாரதிய ஜனதா நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயிகளான ராமசந்திரப்பா, வெங்கடேசப்பா இவர்கள் கடந்த பலத்தலைமுறைகளாக அரசு ஒதுக்கிய நிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகியான கோபால் என்பவர் அரசுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தினை ஊராட்சி செயலாளர் மூலம் அபகரித்து சுமார் சுமார் 30 லட்சம் மதிப்பிட்டில் வீடு கட்டி உள்ளார்.

அரசு புறம்போக்கு நிலத்தினை அபகரித்தது மட்டுமின்றி ராமசந்திரப்பா, வெங்கடேசப்பா ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்ப்பட்டுள்ள இடத்தினையும் ஆக்கிரமிப்பு செய்து எந்த ஒரு முன்னறிவிப்புகளும் இன்றி பொக்லைன் ஏந்திரம் மூலம் தென்னை மரங்களை வேரோடு அகற்றி 20 அடி அகலத்திற்கு வழிப்பாதை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து கேட்டால், வருவாய் துறையினர் மூலம் மிரட்டல் விடுத்து வருவதால் பாதிக்கப்பட்ட ராமசந்திரப்பா, வெங்கடேசப்பா ஆகியோர் தமிழக பாதுகாப்பு விவசாய சங்கத்தின் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

இது குறித்து பேசிய விவசாயி வெங்கடேசப்பா..... 
கடந்த பல தலைமுறைகளாக தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் நாங்கள் குடியிருந்து வருகிறோம், இந்த நிலத்தில் தென்னை, மா என பல்வேறு மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம்.

இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தினை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளங்கோ என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமின்றி வீட்டினை சுற்றி எங்களது நிலத்தினையும் ஆக்கிரமிப்பு செய்து அவரது வீட்டுக்கு செல்வதற்காக 20 அடி அகலத்திற்கு பாதை அமைக்க தென்னை, மாமரம் போன்றவற்றினை அகற்றி உள்ளார், இதனால் எங்களுக்கு குடியிருக்க முடியாத நிலை உள்ளது,

ஆகையால், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு துணை போகும் ஊராட்சி செயலாளர், கிராம உதவியாளர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு வழங்கிய இடத்தினை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ