புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி ஊர்வலம்.!
கிருஷ்ணகிரி

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி ஊர்வலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை நகரின் மையப்பகுதி, காந்தி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கடரமண சுவாமி ஆலயத்தில் இன்று (04.10.2025) பெருமாளுக்கே உகந்த புரட்டாசி மாத, மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கடரமண சுவாமியின் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. நிகழ்வில் விஜயகுமார், மாலதி, சபரி, சந்திரன், கோபி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செ. இராஜேந்திரன், செயலாளர் கோ. இரவி, பொருளாளர் திலீப்சிங், தர்மகர்த்தா பெ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ