இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் நீக்க வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் சார் ஆட்சியரிடம் புகார்.!

கிருஷ்ணகிரி

இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் நீக்க வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் சார் ஆட்சியரிடம் புகார்.!

ஒசூர் சட்டமன்ற  தொகுதியில் 12,793 வாக்காளர்கள் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் நீக்க வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் சார் ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சார் ஆட்சியரகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட பொறுப்பாளர் கலசபாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர், அதிமுக சார்பில் இருமுறை பதிவான வாக்காளர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்களை நீக்கக்கோரி சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி அவர்களிடம் பட்டியல் மனு அளித்தனர்.

இதுக்குறித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் அளித்த பேட்டியில்.....

ஒசூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் இரண்டு இடங்களில் 12,793 வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.. இதை நீக்க வேண்டும், அதேபோல உயிரிழந்தவர்கள், போலி வாக்காளர்கள் உள்ளிட்டோரை நீக்கிட வலியுறுத்தி வாக்காளர்கள் பட்டியலை வழங்கி உள்ளோம்..

போலி வாக்காளர்களை நீக்க வேண்டுமென்றால் ஏன் தமிழக முதல்வர் அலறுகிறார் என தெரியவில்லை.. பீகாரில் வெற்றி பெற்றதை போல தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று இபிஎஸ் அவர்கள் முதல்வராக பதவியேற்பார் என பேசினார்.

அப்போது அதிமுக மாவட்ட துணை செயலாளர் மதன், 38வது வார்டு கழக செயலாளர் கும்மி என்கிற ஹேமகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ