சூளகிரி பகுதியில் பேட்டை மாரியம்மன் கோவிலில் 50 வருடங்களுக்கு பிறகு ஊர்த்திருவிழா. !

கிருஷ்ணகிரி

சூளகிரி பகுதியில் பேட்டை மாரியம்மன் கோவிலில் 50 வருடங்களுக்கு பிறகு ஊர்த்திருவிழா. !

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் பேட்டை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஊர் பண்டிகை நடைபெற்றது.

இந்த ஊர் பண்டிகை விழாவில் ஹிந்து முஸ்லிம்கள் இணைந்து மாபெரும் பண்டிகை விழா நடைபெற்றது. அதேபோன்று முஸ்லிம்கள் இந்துக்களுக்கு நீர்மோர் வழங்கி அவருடைய நன்றிகளை தெரிவித்து கொண்டதோடு, ஊர் பண்டிகைக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர். ஊர் ஜமாத் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

அதேபோன்று தெலுங்கு செலக்சன் டிராமா சார்பாக மகாபாரத நாடகம் மற்றும் கோலாட்டங்கள் நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கிடா வெட்டி விருந்து வழங்கப்பட்டது. சூளகிரி பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ