பங்காளிகள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதாக கூறி  அபராதாம் விதித்து கட்டப் பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி

பங்காளிகள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதாக கூறி  அபராதாம் விதித்து கட்டப் பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பங்காளிகள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதாக கூறி  அபராதாம் விதித்து கட்டப் பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சுன்னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா, இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே  அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த சண்டையை தீர்த்து வைப்பதாக கூறி கவுன்சிலர் குமரேசன் தலைமையில் கட்டப்பஞ்சாயத்து நடந்து உள்ளது. அப்போது இதில் மஞ்சுளாவின் மகன் அங்கு இருந்த பெரியவர் ஒருவரை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் குமரேசன் உள்ளிட்ட பலர் மஞ்சுளா மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு ஊரை விட்டு தள்ளி வைத்தாகக் கூறப்படுகிறது,

இந்த நிலையில் ஊர் திருவிழா நடைபெறுகிறது, இந்த திருவிழாவிற்காக கிராம மக்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது,

ஆனால் ஊர் திருவிழாவில் கலந்துக் கொள்ள எங்களிடம் நன்கொடை வசூல் செய்ய யாரும் வரைவில்லை, இதனால் மன உளைச்சல் அடைந்த மஞ்சுளா தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடும்ப சண்டையால் எங்களை ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டதாக கூறி புகார் மனுவினைக் கொடுத்தார்.

இது குறித்து பேசிய மஞ்சுளாபங்காளின் சண்டையை கட்ட பஞ்சாயத்து கூறி எங்கள் மீது ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு அனைவரது காலில் விழுந்து மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறி எங்களை ஊரை விட்டு தள்ளியும் வைத்து விட்டனர்.

மேலும் எங்கள் ஊரில் ஊர் திருவிழா நடத்த அனைவரிடமும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது, ஆனால் எங்களிடம் எந்த நன்கொடையும் வசூல் செய்யமால் எங்கள் குடும்பத்தினரை ஒதுக்கியே வைத்து உள்ளனர், நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எங்களிடம்  கட்ட படுத்சாயத்தில் விதிக்கப்பட்ட ரூ 30 ஆயிரம் எங்களால் கொடுக்க முடிய வில்லை. ஆகையால் எங்களை கட்டப் பஞ்சாயத்து கூறி ஊரை விட்டு தள்ளி வைத்த கவுன்சிலர் குமரசேன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ