கிருஷ்ணகிரி அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கதிரவன்
தமிழகத்தில் இரண்டு பக்கமும் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் பெரும் கூட்டணி அமைத்து போட்டியிடும் போது தமிழக வெற்றிக்கழகம் இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலா பிரசாந்த் குடும்பவிழா நடைபெற்றது.

இத்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட அகில இந்திய பாவர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், தமிழ் மாநில பொதுச் செயலாளருமான கதிரவன் அவர்களுக்கு, சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விழாவிற்கு வருகை தந்த மாநிலத் தலைவர் கர்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்பு ரமேஷ்,, மாநில மாணவர் அணி செயலாளர் பாஸ்கர பாண்டியன். மாநில மகளிர் அணி தலைவி பானு கருணாகரன், நுகர்வோர் அமைப்பின் மாநில தலைவர் நவாப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவினைத் தொடர்ந்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், தமிழ் மாநில பொதுச் செயலாளருமான கதிரவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கதிரவன் மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக இலவசங்கள் கொடுக்கிறோம், ஏழை, ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சியினர் சாணக்கியத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
1972 ல் எம்.ஜி.. ஆர். திமுகவை விட்டு வெளியே வந்த போது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவருடன் வெளியே வந்தது, ஆனால் விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது யாரும் கூட வரவில்லையே, இன்று கிராமத்தில் யாருக்கு தெரியும் விஜய் யை பத்தி. ஆனால் சிட்டியில வேணுமின்னா இருக்கலாம். அது மட்டுமில்ல, அரசியல் சாணக்கியம் அவருக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்திய அளவில் கடைசி வரைக்கும் கிளைச் செயலாளர்களை வைத்துள்ள ஒரே கட்சி திமுக, மற்றும் அதிமுகவை தவிர வேற எந்த கட்சியும் இல்லை என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் இரண்டு பக்கமும் திமுக, அதிமுக ஆகிய இருக்கட்சிகளும் பெரும் கூட்டணி அமைத்து போட்டியிடும் போது தமிழக வெற்றிக்கழகம் இல்லாமல் போய்விடும் அதனால் அவர்கள் நினைப்பது தவறான எண்ணம் என்று குறிப்பிட்டார்.
அப்போது கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
