கிருஷ்ணகிரியில் கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனுக்கு மாபெரும் வரவேற்பளித்து, நிகழ்ச்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத்தலைவர் விஜய்காந்த் நல்லாசியுடன் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பெரியசாமியின் குழந்தைகளின் காதணி விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் வருகை தர இருப்பது தொடர்பாக கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், தேர்தல் பணி குழு செயலாளருமான எஸ். கணேசன் அவர்களின் மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் கழக இளைஞரணி செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும் கொடிகள் மற்றும் நிகழ்ச்சியை சிறப்பிப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.
சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மற்றும் மாவட்ட அவைத் தலைவர் எல்.முருகன், மாவட்ட பொருளாளர் வி.லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கே.வி.கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் எம்.சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.வேலு, தர்மலிங்கம், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.என்.ராமலிங்கம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் எம்.முருகேசன், நகர கழக செயலாளர் ஆர்.ரவி, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சி.வஜ்ரவேல், கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மாதேஷ், கேப்டன் மன்ற துணை செயலாளர் கோவிந்தராஜ், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கனகன், கிருஷ்ணகிரி ஒன்றிய அவைத் தலைவர் பார்க் கோவிந்தன், பார்க் சிவா, மேற்கு ஒன்றிய அவை தலைவர் பகுத்தன் (எ) சுரேஷ், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சின்னையன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நகர அவைத் தலைவர் எம்.சங்கர் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
