இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட்.. சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட்.. சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

ஆம்ஸ்டர்டாம்: காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்தாண்டு அக். மாதம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் போரைத் தொடங்கியது. இதனால் காசாவில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அந்த வழக்கில் இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களின் போர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், போர் தொடர்பாக இஸ்ரேல் அரசின் அறிக்கைகளையும் நிராகரித்துள்ளது. மேலும், மருத்துவ உதவிகளைப் புறக்கணித்து, குழந்தைகள் உட்பட பல உயிரிழப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்தியதாகச் சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த இரு இஸ்ரேல் தலைவர்கள் மட்டுமின்றி ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரிக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.