கும்மனூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டும் விழா துவங்கியது, இதில் பாரம்பரிய முறைப்படி ஊர் எல்லையம்மனுக்கு கிராம மக்கள் பூஜைகள் செய்து மஞ்சு விரட்டும் விழாவினை நடத்தினார்கள், இத்த விழாவில் 200 க்கு மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருவிழா மற்றும் மாட்டுப் பொங்கல் திருவிழா கிராமங்களில் சிறப்பாக கொண்டாடும் வழக்கம், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடத்தப்படும் இந்த மாட்டுப் பொங்கலின் போது விவசாயிகள் தங்களின் உற்ற தோழனான விளங்கும் கால்நடைகளுக்கு, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வழிபடுவது வழக்கம்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டும் விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது,
திப்பனப்பள்ளி முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது ஊர் மையப் பகுதியில் அமைந்துள்ள ஊர் எல்லையம்மனுக்கு ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது
இதனைத் தொடர்ந்து கிராமத்தில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மஞ்சுவிரட்டும் விழா நடைப்பெற்றது. இதில், திப்பனப்பள்ளி, கும்மனூர், தாசிரிப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து தங்களது 200-க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் தலையில் வண்ண, வண்ணதடுக்குகளை அணிவித்து அழைத்து வந்தனர்.
பின்னர் எருதுகளை ஒவ்வொன்றாக ஓடவிடப்பட்டது. இதில் பல வண்ண தடுக்குகளை கட்டிக்கொண்டு சீறிப்பாய்ந்து ஓடியதை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
மேலும் இந்த விழாவினை ஏராளமான பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள், சிறுவர்கள் என ஏராளமானவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
