லக்கி பாஸ்கர் திரை விமர்சனம். !
Lucky baskar

லக்கி பாஸ்கர்
எல்லோருக்கும் அதிர்ஷ்டமும் வாய்ப்பும் தேடி வராது.நாமதான் உருவாக்கணும் எனும் ஒருவரி கதை தான் திரைப்படம்.
வசதியில்லை.. பணமில்லை என்று உறவுகள், சொந்தங்களால் அவமானப்படுத்தப்படும் மிடில் கிளாஸ் குடும்பஸ்தன் எப்படி பணம் சம்பாதிக்கிறான்? தன்னை உதாசீனம் செய்த உறவுகளுக்கும், கஷ்ட நஷ்டத்தில் தன்னுடன் பயணித்த நண்பர்களுக்கு எப்படி உதவுகிறான் என்பதே கதையின் அம்சம்.
ஒவ்வொரு காட்சியும் பாஸ்கர் பேசும் ஒவ்வொரு வசனமும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கிறது. பணம் தான் ஒருவரின் மரியாதையை தீர்மானிக்கிறது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லியிருக்கிறார்கள்.
வசதியில்லை என்பதற்காக உறவினர் வீட்டு விஷேசத்தில் அவமானப்பட்டவர்கள், வேலையில் புரமோசன் கிடைக்காமல் ஆபிஸ் பாலிடிக்ஸ்சில் சிக்கியவர்கள் என இது போன்ற நபர்களுக்கு இந்த படம் கனெக்ட் ஆகும்.
பர்சிஸ் பணம் இல்லாவிட்டாலும் எதையும் பாசிட்டிவ் மனநிலையோடு எதிர்கொள்ளும் நாயகனை தேடி வரும் வாய்ப்பை அவன் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கிறான் பணக்காரன் ஆகிறான்.
வங்கியில் கேசியர் ஆக இருக்கும் பாஸ்கர் அந்த பணத்தை பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கிறான் என்பதுதான் கதை.
ஷேர் மார்க்கெட் ஹர்சத் மேக்தாவின் கதையும் இதில் உள்ளே வருகிறது. பாஸ்கராகவே மாறி வாழ்ந்திருக்கிறார் துல்கர் சல்மான் இந்த படத்தில்.
கையில் காசில்லாத நிலையிலும் வெறும் பர்ஸ் ஆக இருந்தாலும் முகத்தில் புன்னகை மாறவில்லை. பணமில்லையே என்று குடும்பத்தில் யாரையும் கஷ்டப்படுத்தவில்லை அங்குதான் ஜெயிக்கிறார் மிடில் கிளாஸ்மேன் பாஸ்கர்.
எல்லோருக்கும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வராது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் நம்பிக்கையான நண்பர்கள், தொழில் பார்ட்னர்கள் கிடைக்கமாட்டார்கள்.
இந்த படத்தில் இரண்டுமே பாஸ்கருக்கு கிடைக்கிறது. ஒரு ஏழை நண்பனால் அறிமுகமாகும் ராம்கி தனது தொழிலுக்கு பணம் கேட்கிறார் நாயகனோடு. ஆரம்பத்தில் பணம் இல்லையென்று கூறும் நாயகன் திடீரென பணம் கொடுக்க சம்மதிக்கிறார்.
அப்போது நண்பன் கேட்கிறார் எப்படி பணம் ரெடி பன்னுவீங்கனு. இதை கேட்டதும் நாயகன் சிரித்தப்படி கடந்து செல்கிறார்.
பின்னர் வழக்கம் போல் பணிக்கு வருகிறார் பாஸ்கர். பலரும் வங்கியில் பணம் செலுத்துகிறார்கள். அதிலிருந்து ராம்கி கேட்ட பணத்தை எடுத்து வங்கிக்கு தெரியாமல் வெளியே கொண்டு வந்து கொடுத்து விடுகிறார். கொடுத்து விட்டு பல சிந்தனைகள் பாஸ்கருக்கு. பணம் வருமா வராத என சஸ்பென்ஸ் மிக அருமை.
இவ்வாறு சஸ்பென்சுகளோடு குழம்பி இருக்கையில் நண்பன் மட்டும் வீட்டின் வாசலில் வந்து சோக முகத்தோடு நிற்பார்.இதை பார்த்த நாயகன் பாஸ்கர் பதற்றத்துடன் நண்பனை பார்க்க மறைந்திருந்து ஷாக் கொடுத்த ராம்கி முன்னே வருவார்.
பின்னர் மெல்லமாக சார் என நாயகன் அழைக்க ராம்கி தான் சொன்னபடி லாப பங்கையும் அசலையும் சேர்த்து திருப்பி கொடுத்து விடுகிறார்.
ராம்கி தான் செய்யும் தொழில் இல்லீகல் என்றாலும் பணம் கொடுத்த பாஸ்கருக்கு பத்திரமாக லாபத்தோடு பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்.
பின்னர் இதே போல் தினசரி பேங்கிலிருந்து தெரியாமல் பணம் எடுப்பது அதை முதலீடு செய்து மூவரும் லாபம் சம்பாதித்து பின்பு அசலை ரெஜிஸ்டரில் ஏற்ற இறக்கமாக காட்டி பணத்தை திரும்ப வைப்பதுமாக கதை மெதுவாக ஆர்வத்துடன் செல்லும்.
இதற்கிடையில் ராம்கி தனது தொழிலை நிறுத்தப் போவதாகவும் கடைசியாக ஒரு பெரிய பிஸினஸ் செய்து விட்டு நிறுத்தி விடுவதாகவும் கூறுகிறார். அதற்கு பெரிய தொகை கேட்கிறார். நாயகனோ இரு மனதோடு பயந்து கொண்டு ஒரு குருட்டு தைரியத்தில் பணத்தை கொடுத்து விடுகிறார். பணத்தை பெற்ற ராம்கி சென்று விடுகிறார்.
அந்நேரம் திரையரங்கில் உள்ள அனைவரின் மனநிலையும் ராம்கி பெரிய அமௌண்ட்டோடு எஸ்கேப் ஆகி விடுவார் என்பது தான் சிந்தனை. நடைமுறை வாழ்க்கையும் அதிகம் அதுவே.
ஆனால் அங்கே தான் ஒரு நல்ல டிவிஸ்ட் வைத்திருப்பார் இயக்குநர். நாயகனும், நண்பனும், படம் பார்ப்பவர்களும் எதிர்பார்த்தது போல் இல்லாமல் பழைய மாதிரியே ராம்கி லாபத்துடன் பணத்தை திரும்ப கொடுத்து விட்டு நான் அமெரிக்கா செல்கிறேன். எனது நம்பர் இது தான். ஏதும் தேவைப்பட்டால் கால் செய்யுங்கள் எனக் கூறிச் செல்கிறார்.
பிறந்தநாளில் ஒரு துண்டு பெரிய கேக் கேட்டு அத்தையிடம் அவமானப் படுத்தப்பட்ட குழந்தை தனக்கு பிறந்த நாள் கொண்டாடிய அப்பாவிடம் கண்ணீர் மல்க நன்றி சொல்லும் தருணத்தில் அசத்தியிருக்கிறான் அந்த குட்டி.
என்னதான் வசதி வந்தாலும் மிகப்பெரிய ஹோட்டலில் போய் பல வவகையான ருசியான உணவுகளை சாப்பிட்டாலும் ரோட்டோர கடையில் வடா பாவ் சாப்பிட்டது போல இல்லை என்று அந்த குழந்தை சொல்வது கூட செம பஞ்ச்.
பணம் வந்த பிறகு பணக்கார தோரணையில் இருக்க வேண்டும் மிடில் கிளாஸ் மனநிலையில் இருக்கக் கூடாது என்று சொல்லும் பாஸ்கரை ஏனோ மனைவிக்கு பிடிக்காமல் போகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கையில் காசில்லாத நேரத்தில் குடும்ப வாழ்க்கை கசந்து போகும். அவனை விட்டு விட்டு வந்து விடு என்று அம்மா சொல்லும் போது கூட கணவன் மீதான காதலோடு இருக்கிறாள் பாஸ்கரின் மனைவி.
எத்தனை கஷ்டம் வந்தாலும் விட்டுச்செல்லாமல் துணை நிற்கும் மனைவிக்காக பாஸ்கர் எடுக்கும் ரிஸ்க் சாமர்த்தியமாக செயல்படும் காட்சிகள் மிக அருமை.
அம்மா வீட்டில் கிடைக்கும் சின்ன அவமானம் கூட பாஸ்கரின் மனைவிக்கு ரோசத்தை வரவழைக்கிறது. அதே அம்மா தனது மகனுக்காக பணம் கேட்கும் போது சொல்லி காட்ட தோன்றுகிறது. நீ பண்ற பிசினஸ் நான் போட்ட பிச்சை என்னோட ஐடியா.என்று அம்மா சொன்ன உடன் அதைக்கேட்டு தனது ஹொட்டலையே அடித்து நொறுக்குவதும் அந்த ஹோட்டலைக் கூட நாயகன் பாஸ்கர் தான் சம்பாதித்த கருப்புப் பணத்தை வெளிநாடுகள் மூலமாக வெள்ளையாக்கத் தான் தனது பெயரில் திறந்திருக்கிறார் என்பதை அறிந்த மனைவியின் கோபமும் ஏக்கமும் அருமையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாஸ்கருக்கும் மனைவிக்கும் வசதி வாய்ப்புகள் வந்த பிறகு ஏற்படும் சண்டைகள் அதனால் ஒரே வீட்டிற்குள் இருந்தும் பிரிந்து வாழ்வதை கண்டு மகனை அழைத்து கண்டித்து போதும் நிறுத்திக் கொள். இதற்குமேல் விளையாடாதே எனக் கூறி தான் யார் என்று மகனுக்கு காட்டும் அப்பா. பின்னர் அப்பாவின் உதவியாலும் தனது பழைய பார்ட்னர் ராம்கி மூலமாக வெளிநாட்டில் முதலீடு செய்து தப்பிக்கும் காட்சியும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாமே சினிமாவிற்கான காட்சி அமைப்புகள்தான் என்றாலும் பல காட்சிகள் ரசிக்க வைக்கிறது. சொந்த வாழ்க்கையோடு பொறுத்தி பார்க்கத் தோன்றுகிறது. எங்கும் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறார் பாஸ்கர் என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
இந்தப்படத்தின் கதையம்சம் அருமையாக இருந்தாலும் இது போன்ற பிசினஸ், தெரியாமல் எடுக்கும் பணத்தில் லாபம் சம்பாதித்து விட்டு மீண்டும் அந்த பணத்தை நியாயமாக திருப்பி வங்கியில் வைப்பது என்பது எல்லோருக்கும் அமையாது. அது ஒரு சிலருக்கே அமையும். அதனால் தான் என்னவோ படத்தின் பெயர் லக்கி பாஸ்கர்.