சர்வதேச முதியோர் தினம் முதியோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

சர்வதேச முதியோர் தினம் முதியோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

சர்வதேச முதியோர் தினம் முதியோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.10.2025-ம் நாளன்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது அதனை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பாக முதியோர் மருத்துவ பயனாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதியோர் பயனாளர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் (நோட்டீஸ்) வழங்கப்பட்டது
இணை பேராசிரியர்கள் மருத்துவர் சத்தியரங்கன்  அவர்களும் , மருத்துவர் வாணிஸ்ரீ அவர்களும் முதியோர்களுக்கான மருத்துவ பயன்களையும், முதியோர்கள் உடல்நலமில்லாத போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை முதியோர்களுக்கு அறிவுரைகளாக வழங்கி வகுப்புகள் எடுத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே சத்தியபாமா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர். பி.சந்திரசேகரன், கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் செல்வராஜ், மருத்துவர் மது மற்றும் பொது மருத்துவத்துறை பேராசிரியர் பொறுப்பு மருத்துவர் அறிவுமணி  ஆகியோர் முன்னிலையேற்று முன்னிலை உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வருகை புரிந்திருந்த முதியவர்கள் அவர்களது உறவினர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நிர்வாக அலுவலர் மற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ