எம்.சி இரகு மரியாதை நிமித்தமாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் சட்ட மன்ற தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றார்.!

கிருஷ்ணகிரி

எம்.சி இரகு மரியாதை நிமித்தமாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் சட்ட மன்ற தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றார்.!

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி இரகு மரியாதை நிமித்தமாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் சட்ட மன்ற தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக எம்.சி. இரகு அவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களின் உத்தரவின்படி முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி அன்னை சோனியாகாந்தி, எதிர்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதியதாக நியமானம் செய்யப்பட்டுள்ள எம்.சி. இரகு சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரும் கிள்ளீயூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசிபெற்றதோடு தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்களையும் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது நன்றியினை தெரிவித்து வருகிறார்.

செய்தியாளர் 

மாருதி மனோ