மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
