மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம்.!

மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம்.
 
கிருஷ்ணகிரி நூலகத்தில் பயின்று போட்டித்தேர்வில் வென்று அரசு வேலையில் சேர்ந்த சாதனையாளர்களை வாசகர் வட்டம் மற்றும்  மாவட்ட மைய நூலகத்தின் சார்பாக பாராட்டு விழா.  

இதில் போட்டி தேர்வில் வென்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு பரிவட்டம் கட்டி பொன்னாடை போர்த்தி, கேடயம், நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இதில் கம்பன் கழகத்தின் தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர், கம்பன் கழக  தலைவர் கிருஷ்ணகிரி மற்றும் பொருளாளர் மு.ஸ்ரீரங்கன் மற்றும்  வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் நூலகத்தின் சார்பாக நந்தகுமார் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுரேஷ் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் என்னற்ற மாணவ மாணவிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

போட்டி தேர்வில் சாதித்த அனைவரும் தங்கள் எவ்வாறு போட்டித்தேர்வில் வென்றோம் அதற்கு நுலகத்தின் சார்பாக நடத்திய பல்வேறு மாதிரி தேர்வுகள் பெரிதும் துணைபுரிந்தது மற்றும் வாசக வட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு மற்றும் மையநூலகத்தில் பனி புரிந்து வரும் அலுவலர்கள் அனைவரின் பங்களிப்புக்கு நன்றிகள் தெரிவித்தனர் மற்றும் தன்னுடைய  பெற்றொர்கள் மற்றும் நண்பர்கள் பக்கபலமாக இருந்ததனால் தங்களால் சாதிக்க முடிந்தது என்பதை அவரவர்களின் தனிப்பட்ட அனுப்பவத்தை வருங்காலத்தில் போட்டி தேர்வுக்கு தாயாகிக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்களின் அனுபவத்தை கூறி பெற்றோருக்கும் வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தி கௌரவித்து, நிகழ்வின்  நிறைவாக நன்றி நவில, உணவளித்து சிறப்பு செய்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ