தமிழக அரசு பொங்கல் தொகுப்புகளுடன் மண்பானையுடன் அடுப்பினையும் சேர்த்து இலவசமாக வழங்கிட வலியுறுத்தி மண்பானையை கையில் ஏந்தியவாறு கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்..!

கிருஷ்ணகிரி

தமிழக அரசு பொங்கல் தொகுப்புகளுடன் மண்பானையுடன் அடுப்பினையும் சேர்த்து இலவசமாக வழங்கிட வலியுறுத்தி மண்பானையை கையில் ஏந்தியவாறு கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்..!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்புகளுடன் மண்பானையுடன் அடுப்பினையும் சேர்த்து இலவசமாக வழங்கிட வலியுறுத்தி மண்பானையை கையில் ஏந்தியவாறு கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.

தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவசமாக கரும்பு, சர்க்கரை, அரிசி, வெல்லம் ஆகியவற்றினை இலவசமாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசு தமிழக விவசாயிகளை ஊக்குவித்து வருவது போல மண்பாண்டத் தொழிலாளிகளின் வாழ்வாதரத்தினை ஊக்குவிக்கு விக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டத் தலைவர் தேவேந்திரன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளிகள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழக அரசு ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அது போல இந்த பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் மண் அடுப்புகள் வழங்கிட வலியுறுத்தி மண் பானை மற்றும் மண் அடுப்புகளுடன் வந்த மண்பாண்டத் தொழிலாளின் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.

அப்போது மண்பாண்ட தொழிலாளிகள் கூறுகையில்  தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைத் தாரர்களுக்கு   பொங்கல் பரிசாக கரும்பு, சர்க்கரை, அரிசி, வெல்லம் மற்றும் வேஸ்டி, சேலைகளையும் வழங்கி வருகிறது.

அது போல மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மண்பாண்டத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தினை காத்திட பொங்கல் பரிசுடன் கூடுதலாக மண் பானை மற்றும் மண் அடுப்புகளையும் சேர்த்து இலவசமாக வழங்கிட வேண்டும்,

மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்ளுக்கு மழைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையை 5000 ரூபாய் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்,

கடந்த பல தலைமுறைகளாக ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் செய்து வரும் இடத்திற்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்,

மத்திய, மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியாக கணக்கெடுக்கப்பட வேண்டும்,

ஏரி, குளங்களில் களிமண் எடுக்க மண்பாண்ட தொழிளிகளுக்கு  உரிய அனுமதி அளிக்க வேண்டும்.....
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பெருலாளர் வேடியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் சீனப்பா மற்றும் தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினைச் சார்ந்த கிருஷ்ணன், தண்டபாணி, முனியப்பன், ஹரி, முகுந்தன், கனகராஜ், சக்திவேல், சிவகாமி, உமா, மலர்வழி, அமுதா, கந்தன், சீனிவாசன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ